பருப்பு வகைகள்: உலகின் பரவலான மக்கள் பயன்படுத்துவது பருப்பு வகை ஆகும். உடலின் அன்றாட தேவைக்கு பயன்படும் புரதசத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துகளும் உள்ளன. இது இதய ஆரோக்கியம் மேற்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
பருப்பு வகைகள் பசியைக் கட்டுப்படுத்துதல், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. பருப்பு வகைகளில் ஃபோலேட் நிறைந்துள்ளதால், புதிய செல்கள் உருவாக உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.