நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் குளிக்க பயன்படுத்தும் குளியல் பொருட்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதைக் கவனித்திருப்போம். ஆனால், பல வணிக குளியல் பொருட்களில் நிறைந்துள்ள இரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இதற்கு பதிலாக, மூலிகை குளியல் பவுடர்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் இயற்கையான மாற்றாக உள்ளன. இந்த பதிவில், மூலிகை குளியல் பவுடர்களின் நன்மைகள், உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பயன்கள் மற்றும் இவை எவ்வாறு பராமரிப்புக்கு ஒரு சிறந்த வழியாக இருக்கின்றன என்பதைக் பற்றி பார்க்கப்போகின்றோம்.
இரசாயனம் கலந்த பொருட்களால் ஏற்படும் சில பாதிப்புகள்
•இரசாயனம் கலந்த பொருட்கள் பலரின் சருமத்திற்கு சுத்தம் தருவதாக கருதப்பட்டாலும் அவை சில நேரங்களில் சருமத்தின் இயற்கை ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
•இந்த பொருட்களில் உள்ள செயற்கை ரசாயனங்கள், நீண்ட காலம் பயன்படுத்தும் போது தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
•இரசாயனம் கலந்த பொருட்களில் உள்ள செயற்கை வாசனைகள் நீண்ட காலப் பயன்பாட்டிற்குப் பிறகு உடலின் இயற்கை வாசனையை மறைக்கும் நிலைக்கும் போகலாம்.
எடுத்துக்காட்டாக: (ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள், குறிப்பாக டால்க்கம் பவுடரில் புற்றுநோய் உருவாகும் சில இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளன எனக் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சமீபத்தில் சில செய்திகளும் பேசப்பட்டும் வந்தன.)
எனவே இரசாயனம் கலந்த பொருட்களில் எவ்வித பிரச்சனைகளும் வர வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதுபோன்ற பொருட்களைத் தவிர்த்து இயற்கையான பொருட்களை உபயோகிப்பது நல்லது.
மூலிகை குளியல் பவுடர்களின் இயற்கையான அமைப்பு
வணிக குளியல் பொருட்களில் இரசாயனங்கள் மற்றும் செயற்கை மணங்கள் அதிகமாக உள்ளன. இவை சருமத்தில் ஒவ்வாமை மற்றும் நீண்ட காலத்தில் ஆரோக்கிய சிக்கல்களை உருவாக்கலாம். இதற்கு மாறாக, மூலிகை குளியல் பவுடர்கள் முழுமையாக இயற்கையான மூலிகைகள், நறுமணங்கள் மற்றும் சருமத்திற்கு பயனுள்ள பொருட்களால் உருவாக்கப்பட்டவை. பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், ஆரஞ்சு தோல் பவுடர், மஞ்சிஸ்தா பொடி, வெட்டிவேர், துளசி இலைகள் மற்றும் வேப்பிலை, போன்ற பொருட்கள் இதற்கு உதாரணமாகும்.
இவை:
•சருமத்தை இயற்கையாக சுத்தம் செய்யும்.
•மென்மையான மற்றும் பளபளப்பான தோற்றத்தை உருவாக்கும்.
•சருமத்தின் இயற்கை எண்ணெய் சமநிலையை காப்பாற்றும்.
இது மட்டுமல்லாமல், மூலிகை பவுடர்கள் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது, இயற்கையான வாழ்க்கை வடிவமைப்பிற்கு ஏற்றதாக இருக்கும்.
உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பயன்கள்
மூலிகை குளியல் பவுடர்களில் உள்ள மூலிகைகள் சருமத்திற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இயற்கையான மூலிகைகள் தோல் ஆரோக்கியத்தை அதிகரித்து, மென்மையான தோற்றத்தை வழங்குகின்றன. வணிக குளியல் பொருட்களில் உள்ள தீவிர இரசாயனங்களால் உண்டாகும் ஒவ்வாமை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளை இதனால் தவிர்க்கலாம்.
முக்கிய நன்மைகள்:
சருமத்தை பளபளப்பாக மாற்றும்:
பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், ஆரஞ்சு தோல் பவுடர் போன்ற பொருட்கள் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகின்றன.
சரும தொற்றுகளை தடுக்கும்:
வேப்ப மரத்தின் இலையினைக் கொண்டு உருவாக்கப்பட்ட தூள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து சரும தொற்றுகளை குறைக்க உதவுகின்றன.
இயற்கையான மணத்தை வழங்கும்:
மூலிகை பவுடர்களில் உள்ள இயற்கையான நறுமணங்கள் மனதின் அமைதியை அதிகரிக்கின்றன. மேலும் இவை உடலில் உள்ள வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க உதவுகிறது. இது வியர்வையின் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் உடலில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு புதிய வாசனையை பரப்புகிறது.
சருமத்தை இளமையாக வைத்திருக்கும்: தோல் தளர்ச்சியை குறைத்து, இளமையான தோற்றத்தை உருவாக்கும். வணிக குளியல் பொருட்களில் பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயனங்களின் எதிர் பாதிப்புகளை தவிர்த்து, இவை சுத்தமான மற்றும் இயற்கையான தேர்வாக அமைகின்றன.
பராமரிப்புக்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும்:
பாரம்பரிய பராமரிப்பு:
பாரம்பரிய முறைகளின் மூலம், எளிமையான, எவ்வித செயற்கை கலப்படங்களும் இல்லாத குளியல் பொடிகள் சருமத்தை தனித்துவமான வகையில் பராமரிக்கின்றன. இது, பலவிதமான சரும பிரச்சினைகளை எதிர்க்க உதவுகிறது.
இயற்கையான மற்றும் நவீன பராமரிப்பு:
குளியல் பொடிகளில் உள்ள மூலிகைகள் மற்றும் பிற இயற்கை பொருட்கள் தோல் பராமரிப்பில் மிகுந்த கவனத்தைத் தருகின்றன. இவை நவீன பராமரிப்பு முறைகளுடன் இணைந்து சருமத்தை மிருதுவான மற்றும் அழகானதாக மாற்றுகின்றன.
பயன்பாட்டு வழி முறைகள்:
மூலிகை குளியல் பொடிகளை சரியான முறையில் பயன்படுத்துவது அவற்றின் முழு நன்மைகளை பெற உதவுகிறது. இங்கே சில பொதுவான மற்றும் எளிய பயன்பாட்டு முறைகள் அளிக்கப்பட்டுள்ளன:
பொதுவான குளியல் பயன்பாடு:
•ஒரு டீஸ்பூன் மூலிகை குளியல் பொடியை எடுத்துக் கொள்ளவும்.
•சிறிது தண்ணீர் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
•இந்த கலவையை சருமத்தில் நன்கு பரப்பி, மெதுவாக மசாஜ் செய்யவும்.
•5-10 நிமிடங்கள் கழித்து, நன்கு கழுவவும்.
சரும பிரச்சினைகளுக்கான தனிப்பட்ட முறைகள்:
உடல் வெப்பத்திற்கு மற்றும் வறண்ட சருமத்திற்குத் தீர்வாக, 1 டீஸ்பூன் குளியல் பொடியை தேங்காய் எண்ணெய் அல்லது பசும்பாலுடன் கலந்து பயன்படுத்தலாம்.
இது தோலை ஈரப்பதம் மற்றும் மென்மையுடன் பராமரிக்கும்.
சரும பராமரிப்பு வழிமுறை:
தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்த மூலிகை குளியல் பொடியை உங்கள் சருமத்திற்கு உபயோகிப்பதன் மூலம் இது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி, நீங்கள் மூலிகை குளியல் பொடிகளின் முழு நன்மைகளைப் பெற முடியும். இது சருமத்திற்கு நல்ல பராமரிப்பையும், ஆரோகியதையும் வழங்குகின்றன.
மேலும், மூலிகை குளியல் பொடிகள், சருமத்திற்கு பாதுகாப்பான, இயற்கையான மற்றும் நன்மைகள் நிறைந்த பராமரிப்பை வழங்குகின்றன. இவை இரசாயனம் கலந்த பொருட்களுக்கு சிறந்த மாற்றாக அமைந்து, உங்கள் தோலை சுத்தம் செய்துகொள்வதுடன், அது அழகான மற்றும் ஆரோக்கியமான தோலாக மாற உதவுகின்றன. இந்த இயற்கை முறைகள், நீண்டகாலம் பயன்படுவதற்கும் உகந்ததாக இருக்கும்.