தென்னிந்திய மக்களின் அன்றாட பயன்பாட்டில் அரிசி முக்கியப்பங்கு வகிக்கிறது, வெள்ளை அரிசி இருவகைப்படுகிறது ஒன்று சாப்பாடு அரிசி என்றும், இட்லி அரிசி என இருவகைப்படுகிறது. சாப்பிட்டு அரிசி மத்திய உணவாகவும், இட்லி அரிசியை, இட்லி, தோசை செய்யவும் பயன்டுகிறது.
பாரம்பரிய வெள்ளை நிற அரிசி வகைகளும், அதன் சுவை, நிறம், மருத்துவ குணங்கள், எப்படி சமைப்பது என்பதை பின் வருமாறு பார்ப்போம்.
1. தூயமல்லி அரிசி,
இதன் பெயர் என வர காரணம், அறுவடை சமையத்தில் இதன் கதிர்கள் பார்ப்பதற்கு மல்லிகை மொட்டு போல் இருக்கும், அரிசியின் நிறம் வெள்ளை நிறத்தில் இருக்கும், இதனால் தூயமல்லி அரிசி என பெயர்பெற்றது.
தூயமல்லியின் நிறம் – வெள்ளை நிறம்(முத்து போன்ற வெள்ளை)
சுவை : அரிசி சுவைகளிலேயே தனித்துவமானது. ஆங்கிலத்தில் earthy Flavour(மண்-வாசனை பொருட்கள் என்றும் இயற்கையான சுவையுடையது என பொருள்படும்) என்பார்கள்.
மருத்துவ குணங்கள் : எளிதில் செரிமானமாகும். இளமையில் ஏற்படும் முதிர்ச்சி குறைக்க வல்லது, நரம்பு மண்டலம் பலப்படுத்தும். எல்லா வயதினருக்கும் ஏற்றது.
எப்படி சமைப்பது: 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நீரில் ஊறவைக்க வேண்டும், 1 பங்கு அரிசி : 2 பங்கு நீர் என்ற வகையில் குக்கரில் வைத்து 3 -5 விசில் கழித்து வைத்து கொள்ளவும்.
என்னென்ன சமைக்கலாம்: மதிய உணவாக, வெரைட்டி ரைஸ்: தக்காளி சாதம், எலுமிச்சை (லெமன்) சாதம், காலை/மாலை சிற்றுண்டி யாக இட்லி, தோசை, அரிசி உப்புமா (Tiffin) போன்ற உணவு வகைகள் செய்யலாம்.
2. தங்க சம்பா:
நெல்மணிகளும் அரிசியும் பார்ப்பதற்கு பொன்னிறமாக இருப்பதால் தங்கசம்பா என்று அழைக்கப்படுகிறதும். அரிசி பார்ப்பதற்கு பொன் நிறமாக இருக்கும். அரிசியின் அளவு சிறிதாகவும் நீளமாகவும் காணப்படும்.
மருத்துவ குணங்கள்: புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. உடலின் உள்ள கொழுப்புகள் சேராமல் தவிர்க்கும். இதனால் உடலில் உள்ள தசை இரத்த நாளங்களில் கொழுப்பு சேராமல் தவிக்கிறது. அணைத்து வயது பருவத்தினருக்கு ஏற்றது. நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. இதய நோயாளிகளுக்கு ஏற்றது.
என்னென்ன சமைக்கலாம்: மதிய உணவு, கலவை சாதம், Fried Rice,.
3. சீரக சம்பா:
அரிசி மற்றும் நெல் மணிகள் பார்ப்பதற்கு சீரகம் அளவை போல இருப்பதால் சீரக சம்பா என்று அழைக்கப்படுகிறது. பழுப்பு நிறத்தில் இருக்கும், சன்ன ரக அரிசி வகைகளில் இதுவும் ஒன்று. வாசனை உடன் இருப்பதால் இதன் பெயர் வாசனை சீரக சம்பா என்றும் அழைக்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தலாம், உடலில் கொழுப்புகளை சேராமல் தவிர்க்கிறது, இரத்த அழுத்தம், இதய நோயாளிகளுக்கு ஏற்றது.
என்னென்ன சமைக்கலாம்: பிரியாணி(சைவம்/அசைவம்), துரித உணவுவகைகள் (Fried Rice), கலவை சாதம், போன்றவை
4. கிச்சிலி சம்பா/கிச்சடி சம்பா அரிசி:
கிச்சிலி சம்பா என்றும் கிச்சடி சம்பா என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நிறம் வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும், இதன் சுவை சற்றே பருப்பு சுவையை ஒத்து இருக்கும்,
மருத்துவ குணங்கள்:
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள தசைகள் வலுப்பெற மற்றும் சருமம் பொலிவு பெற உதவுகிறது.
என்னென்ன சமைக்கலாம்:
சர்க்கரை பொங்கல், அரிசி உப்புமா, இட்லி தோசை, மதிய சாப்பாடு, கலவை சாதம் வகைகள், கொழுக்கட்டை, போன்றவை கிச்சிலி சம்பா அரிசியில் சமைக்கலாம்.
5. பொன்னி அரிசி:
பொன்னி அரிசி என்றும் வெள்ளை பொன்னி அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நிறம் பழுப்பு கலந்த வெண்மை நிறமாக இருக்கும், இதன் சுவை இயற்கையான சுவையை ஒத்து இருக்கும்(Earthy Flavour).
மருத்துவ குணங்கள்:
மற்ற பச்சை அரிசி காட்டிலும், புழுங்கல் பொன்னி அரிசி அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6 இதில் நிறைந்துள்ளது. இதயம் வலுப்பெற எளிதில் செரிமானம் செய்ய உதவும்.
என்னென்ன சமைக்கலாம்:
மதிய உணவாக(சாப்பாடு), கலவை சாதம் செய்ய ஏற்றது.
6. இட்லி அரிசி:
உலகின் சிறந்த காலை நேர சிற்றுண்டியனா இட்லி, இட்லி தயாரிக்க முக்கியமான பொருட்களில் ஒன்று இட்லி அரிசி, இதன் நிறம் பழுப்பு நிறமாக