உணவு குப்பையல்ல

at-ig

Yogesh Ragupathy

பிப் 13 2019


        உணவு குப்பையல்ல

பொது மக்களாகிய நாமும் ஊழல் புரிகிறோம் என்றால், என்ன? நாங்கள் ஊழல் புரிகிறோமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்

உணவினை வீணாக்குதல் மற்றும் உணவு விரயம்  இவை இரண்டை பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பு சற்று குறைவு தான், food and Agriculture Organaisation இது ஐக்கிய நாடுகளின் கூட்டு அமைப்பின் கிளை நிறுவனம்.இவர்களின் அறிக்கை படி உலகின் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகிறது. இந்தியாவின் 40% விழுக்காடு அளவு உணவு வீணாகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ ஒரு லட்சம் கோடியெனக் கணக்கிடபடுகிறது.

அன்னை தெரசா:

ஒரு முறை விருந்து ஒன்றில் கலந்து கொண்ட அன்னை தெரசா, அங்கு வீணாகும் உணவினை சேகரித்து கொண்டுஇருந்தார், இதை பார்த்து கொண்டிருந்த செல்வந்தர் ஒருவர், உங்களுக்கு தேவையான உணவினை புதியதாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று, அன்னை அவர்கள் செல்வந்தரிடம் இவ்வாறு கூறினார், “இந்த உணவினை பசியால் தவிக்கும் பலர் தங்களின் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டார்கள், இன்று அவர்களின் பசியாறும் என்றார் புன்னகையுடன். “

பொதுமக்களிடம், இங்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்று, உங்களுக்கு தெரிந்த திருமண, காதுகுத்து, போன்ற இடங்களில் வீணாகும் உணவினை உங்களுது அல்லது உங்களின் நண்பர்களின் வாகனகளில் பசியால் பாதிப்படையும் மக்களிடம் சேர்க்க கேட்டுக்கொள்கிறேன்.

உணவு வீணாக்குதல் :

உணவு வீணாக்குதல் என்பது பல்வேறு வழி முறையில் வீணாக்கப்படுகிறது அவை

1. அறுவடை சமயத்தில்

2. போக்குவரத்து  முறையில்

3. பதப்படுத்து முறையில்

4. பேக்கிங் மற்றும் நுகரிவோரிடம் சேர்க்கும் முறையில்

5. சமைத்த பின் வீணாக்குதல்

அறுவடை சமயத்தில்:

அறுவடை சமயத்தில் கீழே சிதறும் தானியங்கள் / காய்கறிகள், போன்ற வற்றில் சற்று அதிகப்படியான இருக்கும். உதாரணமாக ஒரு கிராமத்தில் 100 ஏக்கர் விவசாய நிலத்தில் ஏக்கருக்கு சுமார் 10 கிலோ நெல்  றது என வைத்துக் கொள்வோம்

10 கிலோ / ஏக்கர்* 100 ஏக்கர் =1000 கிலோ அதாவது ஒரு டன் என  இப்போது கணக்கிட்டால் ஒட்டு மொத்த உலகம் முழுவதுமாக, இவ்வற்றில் பறவைகள்  / விலங்குகள் அனைத்தும் உண்டபின் ஒரு பங்கு வீணாகிறது என்பது உண்மை

போக்குவரத்து முறையில்:

உணவுத் தானியங்கள் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப் போக்குவரத்து துறையின் பங்கு சற்று முக்கியமானதாகும்  

21 டன்(21000 Kgs)  எடை ஏற்றக்கூடிய லாரியில் கொண்டு செல்லக்கூடிய தானியங்கள் அனைத்தும், தானியங்கள் சிதறும் வாய்ப்பிலிருந்து  தப்பவே முடியாது. ஒரு லாரிக்கு 15 கிலோ எனக் கணக்கிக்கிட்டால் எவ்வளவு எனப் பார்ப்போம்

15(தனியவகைகள்)*100000(லாரிகள்) = 1500000 டன் தானியங்கள் இங்கே விணாகிறது

பதப்படுத்தும் முறையில் :

இந்தியா நாட்டில், பதப்படுத்தும் முறையில் சற்று பின்தங்கி உள்ளோம், ஏனெனில் சேமிப்பு கிடங்கு சற்று குறைவாக உள்ளது. இது மாவட்ட வாரியாக, அல்லது மாநில வாரியாக, தானிய சேகரிப்பு (டன்களின்) குடோன்கள் (கிடங்குகள்) மற்றும் குளிரூட்டபட்ட கிடங்குகள் தேவையான அளவில் இல்லையெனக் கொள்ளலாம்

மாவட்ட வாரியான கிடங்குகள்

மாநில வாரியான கிடங்குகள்

கிடங்குகள்:

  1. குளிரூட்டப்பட்ட கிடங்குகள்  
  2. மழை காற்றோட்ட இல்லாத கிடங்குகள்

இதில் தனியார், அரசாங்க கூட்டுறவு சங்கம் மூலமாகத் திறக்கலாம்

ஒருவேளை பதப்படுத்தும் முறையில்லா பகுதியாக இருந்தால் என்ற கேள்வி எழலாம்

தமிழர் பதப்படுத்தும் முறை கீழே பார்ப்போம்

உதாரணம்: ஒரு கிலோ வெண்டைக்காய் 15ரூ என்றால் ஒரு கிலோ வெண்டைக்காய் வற்றல் ரூ 50-75 வரை,விற்கப்படுகிறது

மதிப்பு கூட்டுபொருட்கள்: மக்களுக்கு சந்தை பற்றிய நிகழ்வுகளை தெளிவுபடுத்த அரசாங்கம், பஞ்சாயத்து, கூட்டுறவு சங்கம் மூலமாக பயிற்சி அளிக்க வேண்டும்.

பேக்கிங் மற்றும் நுகர்வோரின் சேர்த்தல்

உங்களுக்குத் தெரிந்த காடைக்காரரிடம் கேட்டுப் பாருங்கள்,  உங்கள் கடையில் காலாவதியான பொருட்களை என்ன செய்வீர்கள் என்று. அவர் சற்று சோகமான முகத்தோடு சொல்வார் குப்பையில் கொட்டுவோம் என.  இங்கு அந்தப் பொருள் மட்டும் வீணாக்கவில்லை அதனுடன் , பேக்கிங் 10% வீணாக்கப்படுகிறது

சமைத்தபிறகு வீணாக்குதல்:

உங்கள் வீட்டின் Fridge-ல் என்ன வைப்பீர்கள் என Middle Class / Upper Middle Class மக்களிடம் கேட்டால் காய்கறி, மீன் இறைச்சியெனக் கூறுவார்கள், வேறு பொருட்கள் எனக் கேட்டால்  கிடைப்பது பழைய சோறு (தண்ணீர் இல்லாத சாதம்) மற்றும் குழம்பு வகைகள் எனப் பட்டியல் பெருகும்  

1(ஒரு) கிலோ அரிசிஉற்பத்தியாகச் சராசரி 2497 லீட்டர்  நீர் தேவை

விவசாயின் உழைப்பு  + குடும்ப தலைவன் உழைப்பு + போக்குவரத்து செலவு =அரிசி +2497 லிட்டர் நீர் தேவை.

கொஞ்சம் சிந்தியுங்கள், உங்களின் தட்டில் உள்ள உணவு எவ்வளவு தடைகள் தாண்டி உங்கள் தட்டில் வந்து சேர்ந்தது என்று .

தீர்வு:

1. உணவு தனியா பொருட்களை வீணாக்காமல் தவிர்க்கக் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்

2.  ஜெர்மனி /ஸ்வீடன்  போன்ற நாடுகளில், உணவுப் பொருட்களை வீணாக்கினால் அபராதம்(Fine) மற்றும் சிறை தண்டனை கிடைக்கும்

3.  ஜெர்மனி /ஸ்வீடன்-ல் உள்ள விடுதி, shopping complex மிதியாகும் உணவுப் பொருட்களைக் கெட்டு போகும் முன் ஏழை எளிய, சிறுவர்கள் காப்பகங்கள் எனச் சேர்க்க வேண்டும்     4. இதை மீறிக் கேட்டுப் போனால் இதற்கென உள்ள புது பிக்க வல்ல எரிசக்தி முகாமில் சேர்த்து இதிலிருந்து சமையல் கேஸ் / மின்சாரம் எனத் தயாரிக்கலாம்