உங்களுக்கு இந்த கேள்வி ஏழத்தான் செய்யும், பஞ்சம் ஏற்பட்ட 1943 காரணம் காட்டி பசுமை புரட்சி என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்டவிதைகள், வறட்சி தாங்கக்கூடிய விதைகள் அமலுக்கு வந்தது, உரம் பயன்பாடு அதிகரித்தது (பஞ்சத்திற்கு காரணம்: போக்குவரத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணங்கள், என வரலாறு கூறுகின்றது)
அன்று, நாம் அதிகப்படியான பூச்சிக்கொல்லி பயன்படுத்த துவங்கியதன் காரணமாக இன்றைய பல நோய்களை சேர்த்து விதைக்க துவங்கிய காலம் அது,
இதில் கவனிக்க வேண்டியவை, என்னவென்றால், விவசாய உற்பத்திக்கு உரம் ஏற்றுமதி செய்யும் நாடுகள், அவர்கள் தந்த உரங்களில் விளையும் உணவு பொருட்களை வாங்க மறுக்கிறார்கள். காரணம் உணவு பொருட்களில் உள்ள நஞ்சு தன்மை, இதில் மறைந்துள்ள அரசியல் நம் இந்திய மக்கள் உணரவேண்டும்.
நமது நாடு பல நோய்கள் புகலிடமாகவும் சில நோய்களுக்கு உலகளவில் முதலிடத்தில் உள்ளது
அதில் சில பின்வரும் :-
- சக்கரை நோயின் தலைநகரம்
- புற்றுநோயின் தலைநகரம்
- உடல்பருமன் தலைநகரம்
இவை அனைத்திற்கான காரணம் என்ன தெரியுமா
உங்களுக்கு? நம் அன்றாட உட்கொள்ளும் உணவு தான் , ஆம் உணவு மட்டும் தான்.
நம்மிடம் திணிக்கப்பட்ட இந்த, பசுமை புரட்சியின் தாக்கம், தான் நாம் இன்று படும் அனைத்து இன்னலுக்கும் முக்கிய காரணம்,
இத்தனை மருத்துவர்கள் இருந்தும் நோயின் அளவினை மட்டும் கட்டுக்குள் தான் வைக்க முடிந்தது, நோயில்லா இந்திய உருவாகவில்லை.
வைத்தியனுக்கு கொடுப்பதை விட, வாணிபனுக்கு கொடு இது நம்ம பழமொழி
வரும் முன் காப்போம் மருந்து மாத்திரைகளின் செலவு செய்வது விடவும் மேலானது , இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சற்று வேலை அதிகமாக உள்ள நல்ல பொருட்களை பயன்படுத்துவது மட்டும் தான் நம்மிடம் உள்ள வாய்ப்பு
உணவே மருந்து, மருந்தே உணவு …
மாறுவோம் இயற்கைக்கு, பெறுவோம் ஆரோக்கியத்தை …