ஒரு பெண்ணை திருமணம் செய்ய போட்டியில் கலந்து வெற்றி பெற்றால் தான் உங்களுக்கு திருமணம்.
சற்று ஆச்சர்யமா உள்ளதா? ஆம், நம்முடைய முன்னோர்கள் திருமணம் இப்படித்தான் நடந்துள்ளது. இதில் பல போட்டிகள் உள்ளது. அதில் மிக குறிப்பிடப்பட்டது இளவட்ட கல் தூக்கும் போட்டி.
இளவட்ட கல்லா? இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு சற்று குறைவுதான். இளவட்ட கல் என்பது சுமார் 110 முதல் 120 கிலோ எடையுள்ள உருளையான கல் தான்.
100கிலோ எடையுள்ள முட்டையை தூக்குவது சற்று எளிதானது தான்?. என நினைக்க தோன்றும். ஆனால் உருளையான 110 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லினை தூக்குவது சற்று கடினமா காரியம் தான்.
பின் எவ்வாறு இளவட்ட கல்லினை நம் முன்னோர்கள் தூக்கினார்கள். “மாப்பிள்ளை சம்பா” அரிசியை ஒரு மண்டலம் 48 நாட்கள் உண்டு, தினசரி தேவையான பயிற்சிகள் மேற்கொண்டு. இளவட்டக்களினை தூக்கியுள்ளார்கள்.
இன்றளவும் பொங்கல் பண்டிகையின்போது நடக்கும் சிறப்பு போட்டியில் 75 கிலோ, 90 கிலோ, 110 கிலோ, 120 கிலோ என வயதுக்கு ஏற்ற பிரிவில் இளைஞர்கள் கலந்து தங்களின் திறமையினை காட்டுவார்கள்.
மாப்பிள்ளை சம்பாவின் மருத்துவ குணங்கள்:
இரும்புசத்து(Iron) மற்றும் துத்தநாக(Zinc) சக்தி கொண்டது.
ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகின்றது.
தசைகள் மற்றும் திசுக்கள்ளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் புரத சத்ததை சேர்க்க உதவுகின்றது.
பூநிலம் (Pro-Anthocyanins) கொண்டுள்ளதால் அதிகளவு சக்கரை(High BP Hyperglycemia) மற்றும் ரத்தத்தை சுத்தரிக்கிறது.
உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது. இதில், உள்ள தனிமம், Iron, Zinc, Manganese, பாஸ்பரஸ், molybdenum, magnesium, மேலும் கால்சியம் சோடியம் இதில் இல்லை.
இதில் உள்ள நார்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் இதயம் சம்மந்தமான கோளாறு வராமல் தடுக்கின்றது.
Celiac குடல் கட்டிகள் வராமல் தடுக்கின்றதது. குளுட்டோன்(Glutton) போல் இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் இருக்கும்.
ஹீமோகுளோபின் அதிக படுத்துகின்றது. நுண்ணீய ஊட்டச்சத்து அதிகளவில் கொண்டுள்ளது வைட்டமின் B1 உள்ளதால் வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை களைகிறது.
தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் மேம்படுகின்றது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் இதய துடிப்பினை எந்தநேரமும் நிறுத்த வாய்ப்புள்ளது இந்த உணவில் அவை அனைத்தும் குறையும்
குறிப்பு:50 கிராம் அளவு கணக்கில், இதில் 3 கிராம் அளவில், நார்சத்து 48 கிராம் கார்போ ஹைட்ரட்