உலகில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் இரண்டு பங்கு தேனீக்களின் மூலமாக உற்பத்தி ஆகிறது. தேனீக்கள் எப்படி உணவு உற்பத்தியில் உதவுகிறது என்பது தெரிந்து கொள்வோம்.
ஒரு செடியில் அல்லது மரத்தில் உள்ள மலர்களில் ஆண் மலர் என்றும் பெண் மலர் என்றும் உள்ளது. Pollination எனப்படும் மகரந்த சேர்க்கை நடைபெற “தேனீக்கள்” உதவுகிறது.
தலை சிறந்த இந்தியா வேளாண் அறிஞர்களின் அறிவுறுத்தலின் படி இன்று பண்ணை நிலங்களில் தேனீக்களைப் பெட்டிகளில் வைத்து வளர்க்கப்படுகிறது. இதன் மூலமாகத் தினக்கூலி கேட்காத வேலை செய்யவும் தேனீக்கள் நமக்கு தேன் அளிப்பதோடு உற்பத்தி உயரவும் உதவுகிறது.
நமது தென்னிந்தியாவில் எத்தனை வகையான தேன் உள்ளது என்று அறிந்து கொள்ள இந்த பகுதி உதவுகிறது.
தென்னிந்தியாவில் பிரபலமான 10 வகையான தேன் பற்றி அறிந்து கொள்வோம்.
முருங்கை தேன்:
முருங்கை மரம் பண்ணைகளில் தேனீக்கள் சேர்க்கும் தேனை “முருங்கை தேன்” என்றும். Muringo Honey என்றும் Drumstick Honey என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் முருங்கை மரம் மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை பூக்கும். இதனால் முருங்கைக் காய் அறுவடை அதிகரிக்க உதவும் மகரந்த சேர்க்கை நடைபெற உதவுகிறது.
மருத்துவ குணங்கள்:
முருங்கை தேனில் புரதம், இரும்பு, மங்கனீசியம், வைட்டமின் A, C, E, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது. முருங்கை தேன் தைராய்டு, ஓவ்வாமை மற்றும் தாம்பத்திய குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. உடலின் சோர்வினை நீக்கி புத்துணர்ச்சி பெற உதவுகிறது. எலும்புகளை பலப்படுத்தும் தன்மை முருங்கை தேனுக்கு உண்டு.
துளசி தேன்:
தேன் சேகரிப்பில் ஈடுபடும் விவசாயி/தேன் சேகரிப்பாளர்கள் துளசி பண்ணையில் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கப்படும் தேனை “துளசி தேன்” என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
துளசி தேனில் தினசரி பயன்படுத்த உடலில் கபம் குறைத்து சுவாச கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது. ஆஸ்துமா நோய்யுள்ளவர்களுக்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. நுரையீரலில், சளியின் காரணமாக ஏற்படும் தலைவலி, உடல்வலி, சுரம், உடல்சோர்வு போன்ற தொந்தரவு நீக்கி உடலுக்க புத்துணர்ச்சி பெற உதவுகிறது.
வேப்பம் தேன்:
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் “மருத்துவ குணங்கள்” நிறைந்த வேப்ப மர காடுகளிலிருந்து பெறப்படுவதால் “வேப்பம் தேன்” என்றும் “வேம்புத்தேன்” என்றும் அழைக்கப்படுகிறது. வேப்பமரம் பூக்கும் தருணத்தில் தேனீக்கள் கொண்டு தேன் அறுவடை செய்யப்படுகிறது. வேப்பம் தேன் என்றதும் இந்த தேன் கசக்குமா என்று தோன்றும், வேப்பம் தேன் கசக்காது. மாறாக உடல்நலன் காக்கும் இனிப்பு சுவையுடன் இருக்கும்.
இந்த தேனின் சுவை இனிப்பு, புளிப்பு, கசப்பு சுவையுடன் இருக்கும். இந்தியா மற்றும் மலேசியா நாடுகளில் அதிகம் கிடைக்கக்கூடியது.
மருத்துவகுணங்கள்:
வேம்பில் உள்ள அணைத்து மருத்துவ குணங்களும் வேம்புத்தேனில் உள்ளது. சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். முக்கிய மினெரல்கள் மற்றும் வைட்டமின்களான A, B, C, D, E, K நிறைந்து உள்ளது. இது மனிதனின் ஆயுட்காலம் முழுவதும் தேவைப்படும் ஒன்றாகும்.
நாவல் தேன்:
நாவல் மரக்காடுகளில் வைக்கப்படும் தேனீ பெட்டிகளில் சேகரிக்கப்படும் தேனை “நாவல் தேன்” என்று அழைக்கப்படுகிறது. நாவல் பழம் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. மற்ற வகை தேனை போல அல்லாமல் நாவல் தேன் சற்றே கசக்கும் தன்மை கொண்டுள்ளது. நாவல் தேனின் சுவை கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவையுடன் இருக்கும். நம்மில் பலர் இந்த இரண்டு சுவையை உணவில் தவிர்க்கிறோம். இதன் நிறம் சற்றே அடர்கருப்பு நிறத்தில் இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
உணவில் உள்ள சர்க்கரை அளவு ரத்தத்தில் சேரும் போது சர்க்கரை நோய் அதிகரிக்கிறது. தினசரி நாவல் தேனை பயன்படுத்தி சரியான உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக்கட்டுப்பாட்டில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் உணவு செரிமானம் எளிதில் நடைபெற நாவல் தேன் உதவுகிறது.
இரும்புசத்து மற்றும் வைட்டமின் c நாவல் தேனில் இருப்பதால் ஹமோகுளோபின் அதிகரிக்கிறது, ரத்த சோவை மற்றும் மஞ்சள் காமலை நோய்க்கு எதிராக செயல் புரிகிறது.
இதில் உள்ள பொட்டாஷியம், இதயம் தொடர்பான குறைபாடுகளை குறைத்து இதயத்தை பலப்படுத்தும் உதவுகிறது.
மலைத்தேன்:
தென்னிந்தியாவில் பெரும்பாலும் கிடைப்பது கிழக்கும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் தேன் தான். இத்தேனை “மலைத்தேன்” என்று அழைக்கப்படுகிறது. மற்ற வகை தேன் போல அல்லாமல் இந்த தேனை மலைவாழ் பழங்குடியின மக்களால் அறுவடை செய்யப்படுகிறது. மலைகளில் உள்ள காடுகளில் மூலிகை செடிகளில் இருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேனை மலைவாழ் மக்கள் அறுவடை செய்கிறார்கள்.
காடுகளில் உள்ள மரங்கள் அதிகரிக்கவும் மற்ற விலங்குகள் வாழவும் தேனீக்கள் இலவசமாக வேலை செய்கிறது. சித்திரை முதல் ஆடி மாதம் வரை மட்டும் தேன் அறுவடை செய்யப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
தொற்று கிருமிகளின் தொற்று குறைக்க கூடியது. தசைகளில் சேரும் தேவையற்ற கொழுப்பினை குறைக்க வல்லது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. நுரையீரலில் சேரும் கபம் குறைத்து சுவாசம் எளிதில் விட உதவுகிறது. ஆஸ்துமா குறைபாடு உள்ளவர்கள் தினசரி பயன்படுத்த ஆஸ்துமா நாளடைவில் குணப்படுத்தப்படுகிறது.
கொம்பு தேன்:
வனங்களில் உள்ள மரங்களில், மலைகளில் உள்ள பாறைகள் உள்ள பகுதிகளில் தேனீக்கள் கூடு காட்டும் இந்த தேன் கூட்டை கொம்பு தேன் கூடு என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் “கொம்பு தேன்” என்று அழைப்படுகிறது.
மருத்துவ குணங்கள்:
வனங்களில் பல்வேறு வகையான மூலிகைகள், தாவரங்கள், மரங்களில் உள்ள பூக்களில் தேனீக்கள் தேனை சேகரிக்கிறது. இவ்வகை தேனை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. பல்வேறு வகையான மூலிகைகளின் நற்குணங்கள் இதில் உள்ளது.
மலைத்தேனில் உள்ள இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின் பி 2, பி 3, பி 5, பி 6, கால்சியம் மற்றும் வைட்டமின் சி உடலுக்கு ஊட்டமளிக்கும் டானிக் போல செயல் புரிகிறது.
கூர்க் தேன்:
கூர்க் தேன் என்பது கர்நாடக மாநிலத்தின் குடுகு மலை தொடரில் கிடைக்கும் மலை தேன் வகையாகும். குடகு மலை பகுதியில் கிடைக்கும் பலவகையான அபூர்வமான மூலிகை செடிகள், தாவரங்கள், மரங்களில் பூக்கும் பூவிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேனை, மலை வாழ்மக்கள் இந்த தேனை சேகரிக்கிறார்கள்.
மருத்துவ குணங்கள்:
பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தினசரி பயன்பாட்டில் உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
லிச்சி தேன்:
இந்தியாவில் அசாம், பீகார், பஞ்சாப் பகுதிகளில் லிச்சி சாகுபடி செய்யப்படுகிறது. கோடைக்காலமான மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை அறுவடை செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் லிச்சி தேனில் உயிர்ச்சத்துகள், மினரல்ஸ், முக்கியமான நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
மருத்துவ குணங்கள்:
லிச்சி தேனில் முக்கியமான சத்துக்களான உயிர்ச்சத்துகள், மினரல்ஸ் , முக்கியமான நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
குங்குமப்பூ தேன்:
இந்த வகை தேன் இமயமலை தொடரில் குங்குமப்பூ பூக்கும் சமையத்தில் தேனீப்பெட்டிகள் வைத்து சேகரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை பாலில் கலந்து உட்கொள்வதால் குழந்தை நல்ல நிறத்தில் பிறக்கும் என்பது நமது மூதாதையர்களின் நம்பிக்கை.
மருத்துவ குணங்கள்:
குங்கும பூத்தேனை பாலில் கலந்து குடித்து வரக் குழந்தைகள் சிவப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இந்த குங்குமப்பூ தேனை பயன்படுத்தலாம்.
பண்ணை தேன்:
கூட்டுப் பண்ணை விவசாயம் நிலங்களில் வளர்க்கப்படும் தேனீக்கள் சேர்க்கும் தேனை “பண்ணை தேன்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை தேனை ஆங்கிலத்தில் Multi Flower Honey என்றும் Farm Fresh Honey என்றும் அழைக்கப்படுகிறது. விளைச்சல் அதிகரிக்கவும், தேனீக்களின் தேவை போக மீதம் உள்ள தேனை விவசாயிகள் மூலமாக அறுவடை செய்து விற்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்திய மக்கள் பயன்படுத்துவது இந்த பண்ணை வகை தேன். மருத்துவ குணங்கள் மிக்கது.
மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள நச்சு கழிவுகளை நீக்க உதவுகரித்து. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகரித்து.
உடல் இளைக்க, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீரில் தேன் கலந்து அருந்த உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைத்து உடல் இளைக்க உதவுகிறது. வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக தேன் பயன்படுத்தலாம். சருமத்தில் ஏற்படும் காயங்களுக்கு மற்றும் முகபொலிவு பெறவும் பயன்படுத்தலாம்.