பூங்கர் அரிசி சமையல் குறிப்புகள்

at-ig

Vishva Jayraman

ஜன 09 2024


        பூங்கர் அரிசி சமையல் குறிப்புகள்

பூங்கார் அரிசி, தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாய செல்வங்களில் ஒன்று, அதன் சத்துக்கள் மற்றும் தனித்துவமிக்க சுவைக்காக பெருமைப்படுகிறது. இந்த அரிசியை கொண்டு வெவ்வேறு வகையான உணவுகளை தயாரிக்கலாம்; கொழுக்கட்டை, புலாவ், பொங்கல், இட்லி, தோசை போன்ற பல்வேறு உணவுகள் இந்த அரிசியின் சுவையை மேலும் உயர்த்துகின்றன. மேலும், பூங்கார் அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்தை பலப்படுத்துவதோடு, உணவின் ருசியையும் அதிகரிக்கின்றன. இந்த அரிசியை பயன்படுத்தி சமையலில் புதுமையான சோதனைகள் செய்யும்போது, உணவின் சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டும் கைகொடுக்கும்.

1. பூங்கார் அரிசி காய்கறி கொழுக்கட்டை
2. பூங்கார் அரிசி புட்டு
3. பூங்கார் அரிசி காய்கறி கஞ்சி
4. பூங்கர் அரிசி இடியப்பம்

1. பூங்கார் அரிசி காய்கறி கொழுக்கட்டை

poongar rice vegetable kozhukatta

தேவையான பொருட்கள்:

  • பூங்கார் அரிசி – 1 கப்
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • கேரட் – 1 (துருவியது)
  • பீன்ஸ் – 5 அல்லது 6 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • தேங்காய் – 1/4 கப் (துருவியது)
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  •  உளுந்து – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிது
  • எண்ணெய் – சமையலுக்கு ஏற்றளவு (நிலக்கடலை எண்ணெய்எள்ளு எண்ணெய்தூயதேங்காய் எண்ணெய்)
  • உப்பு – சுவைக்கு ஏற்றளவு

செய்முறை:

  • பூங்கார் அரிசியை நன்கு கழுவி 3-4 மணி நேரம் ஊறவைத்து, பின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும். அதை தாளித்தவுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் மற்றும் பீன்ஸ் சேர்க்கவும். இவை நன்கு வெந்துவிட்டால், தேங்காய் சேர்க்கவும்.
  • இந்த கலவையுடன் அரைத்த அரிசி மாவை சேர்க்கவும். நீர் சேர்த்து, உப்பு சேர்த்து கெட்டியாக கிளறவும். மாவு வெந்துவிட்டால், அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • மாவு சூடாக இருக்கும்போதே கையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிய உருண்டைகளாக உருவாக்கி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும்.
  • ஒரு இட்லி குக்கரில் இந்த கொழுக்கட்டைகளை சுமார் 10-15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைக்கவும்.
  • கொழுக்கட்டைகள் நன்கு வெந்து விட்டால், அவை தயார். இவை சுடச்சுட அல்லது ஆறிய பின் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

2. பூங்கார் அரிசி புட்டு

Poongar rice puttu

தேவையான பொருட்கள்:

செய்முறை:

  • அரிசியை வாணலில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும். பிறகு பூங்கார் அரிசியை 6-8 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடிகட்டி நன்கு அரைத்து மாவாக்கவும்.
  • அரைத்த அரிசி பொடியை 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து, பின்னர் அதனை ஆர விடவும். மாவு சிதறும் வகையில் இருக்க வேண்டும்.
  • வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி, அது நன்கு கொதிக்க விடவும். பின்னர் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
  • நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வருத்து, அதனை வெல்ல பாகுடன் சேர்க்கவும்.
  • நன்றாக கிளறி, கம்பி பதம் வந்த உடன், அரிசி மாவைச் சேர்த்து மேலும் ஒருமுறை கலக்கவும்.
  • சிறிது நெய் சேர்த்து மாவை மென்மையாக இரக்கவும்.
  • பூங்கர் அரிசி புட்டு தயார்.

3. பூங்கார் அரிசி காய்கறி கஞ்சி

Poongar rice vegetable porridge

தேவையான பொருட்கள்:

  • பூங்கார் அரிசி – 1 கப்
  • காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பூசணி முதலியன) – 2 கப் (நறுக்கியது)
  • மிளகு – 1 தேக்கரண்டி (பொடித்தது)
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • கடல் உப்பு– சுவைக்கு ஏற்றளவு
  • தண்ணீர் – 4 கப்
  •  நெய் – 1 மேஜைக் கரண்டி

செய்முறை:

  • பூங்கார் அரிசியை நன்கு கழுவி சிறிது நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • எல்லா காய்கறிகளையும் நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • ஒரு பெரிய குக்கரில் நீர் ஊற்றி, அதில் ஊற வைத்த அரிசி, நறுக்கிய காய்கறிகள், மிளகுப்பொடி, சீரகம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • குக்கரை மூடி, சுமார் 3 அல்லது 4 விசில் வரை காய்கறிகளும், அரிசியும் நன்கு வெந்துவிடவும்.
  • வேகவைத்த பின், குக்கரின் மூடி திறந்து, கலவையை நன்கு கிளறி, கஞ்சி சம தட்டுப்பாடு பெற்றுவிட்டால் அதனை இறக்கவும்.
  • ஒரு சிறிய கடாயில் நெய்யை உருக்கி, அதனை வேகவைத்த கஞ்சியின் மேல் ஊற்றவும்.
  • சூடான பூங்கார் அரிசி காய்கறி கஞ்சியை நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

4. பூங்கர் அரிசி இடியப்பம்

Poongar rice idiyappam

தேவையான பொருட்கள்:

  • பூங்கர் அரிசி – 1 கப்
  • துருவிய தேங்காய் – 1/4 கப்
  • கடல் உப்பு – ஒரு சிட்டிகை
  • தண்ணீர் – 3/4 கப்
  • நெய்/எண்ணெய்-1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • பூங்கர் அரிசியை ஒரு இரவு அல்லது 6 மணி நேரம் ஊறவைத்து கழுவவும்.
  • தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாக அரைக்கவும். ஒரு தடிமனான கடாயில் நெய் சேர்த்து மாவை ஊற்றவும். முழு மாவும் ஒட்டாத வகையில் மாறும் வரை கிளறவும்.
  • பிறகு இடியாப்பம அச்சில் மாவை வைத்து அழுத்தி, நெய் தடவிய ஸ்டீமர் அல்லது இட்லி தட்டில் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். மீதமுள்ள மாவிற்கும் அதே போல் செய்யவும்.
  • அவற்றை கட்டியான குழம்பு அல்லது தேங்காய் பாலுடன் பரிமாறவும்.