குழந்தைகள் விளையாடும் பாரம்பரியமான விளையாட்டுகளும் அதன் பயன்களும்

at-ig

Kannan Rajendiran

ஜூலை 16 2021


        குழந்தைகள் விளையாடும் பாரம்பரியமான விளையாட்டுகளும் அதன் பயன்களும்

தற்போது குழந்தைகள் video games மற்றும் cellphone  விளையாட்டுகளில் தங்களது கவனம் செலுத்துவதால் மனசோர்வு, மனஉளைச்சல் மற்றும் உடல் உழைப்பு குறைவதால் பாதிப்புகுள்ளாகிறார்கள். மேலும், சில குழந்தைகளின் பேசும் திறனும் பாதிக்கப்படுகிறது. இது போன்ற குறைபாடுகள் எதுவும் குழந்தைகளை பாதிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நமது பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும்.

பாரம்பரிய விளையாட்டுகள் என்றால் என்ன?

அந்நியர்கள் நம்மை ஆண்ட 300 முதல் 600 ஆண்டுகளுக்குள், நாம் நமது பண்பாட்டையும், விளையாட்டு முறையில் கற்ற கல்வியையும் மறந்தோம். நமது விளையாட்டு முறையில் மூளையின் எல்லா பகுதியும் (Right Brain, Mid Brain, Left Brain) சமமாக வேலை செய்துள்ளது. தற்போது நாம் விளையாடும் விளையாட்டுகளில் இது போல்  உள்ளதா என்று சற்று சிந்தித்து பாருங்கள்?

என்னென்ன பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளது? 

சுங்கரக்காய், பல்லாங்குழி, குட்டன் சோறு, சொப்பு சாமான்கள், தாயம், ஆடுபுலி ஆட்டம், சதுரங்கம், உறியடி, கண்ணாமூச்சி, கபடி, கோகோ, நீச்சல் போட்டி, ஒடிபிடிக்கும் விளையாட்டு. 

பொழுதுபோக்கு கற்றல்: 

  • குழந்தைகள், களிமண்ணில் கலைப்பொருட்கள் உருவாக்குதல்.
  • நெல்மணிகளை பரப்பி எழுத்து வடிவங்களை எழுதி பழககுதல். 

பல்லாங்குழி: 

தமிழ் மக்களின் பண்டைய விளையாட்டுகளில் பல்லாங்குழி முக்கியமான ஒன்று. இந்த விளையாட்டை விளையாடிய குழந்தைகளின் சேமிப்பு திறன் அதிகரிக்கிறது. 

சுங்கரக்காய்: 

சின்ன சின்ன கல் கொண்டு, கைகளில் எடுத்து விளையாடுவது. கண் மற்றும் கைகளுக்கு உடன்குடன் செயல்படும் திறன் அதிகரிக்க உதவும். 

கோலி குண்டு: 

குழந்தைகள் தங்களின் சின்ன சின்ன விரலை பின் புறமாக சற்று அழுத்தி பச்சை/நீல நிற கண்ணாடி குண்டை கொண்டு மற்ற குண்டை அடிப்பார்கள். இதில் குழந்தைகள் தங்களின் சின்ன சின்ன இலக்குகளை அடைவுது எப்படி என்று கற்றுக்கொள்கிறார்கள். மேலும், கைகளின் விரல்கள், மணிக்கட்டு நரம்புகள் வேலை செய்ய உதவுகிறது.  இதன் மூலமாக Fine Motor Skill எனும் திறன் அதிகரிக்கிறது. 

கில்லி தண்டு: 

கிட்டி புள் என்றும் அழைக்கப்படுகிறது. பெரிய மற்றும் சின்ன மரக்குச்சிகள் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு.கிட்டத்தட்ட இன்றைய டுப்பாட்டம்(Cricket) போல வே இருக்கும். சுற்றியுள்ள மற்ற எந்த ஒரு போட்டியாளரிடமும் கிட்டி/கிள்ளி சிக்காத வண்ணம் அடிக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலமாக குழந்தைகள் சிந்தனை அதிகரிக்கிறது. 

உறியடி: 

கண்களை துணியால் கட்டிக்கொண்டு சாரம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ள பானையை உடைப்பது. சுற்றி யுள்ள மக்களின் சத்தம் நடுவே இந்த பானை உடைக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலமாக Mid Brain Activation செயல்படுகிறது. அதாவது கண்களை முடியும் நமது மூளை செயல்படும் முறை Mid Brain Activation ஆகும்.

இதில், மற்ற விளையாட்டுகளை குழந்தைகள் எளிதில் விளையாடி கற்றுக்கொள்ளலாம். ஆனால் சொப்பு சாமான் மட்டும், பெற்றோர்கள் அல்லது வீட்டின் பெரியவர்கள் உடன் சமைக்க வேண்டும். இதனால் குழந்தைகள் காய்கறிகள், மசாலா பொருட்கள், அரிசி, அடுப்பு, நெருப்பு என கையாளும் போது அதன் பெயர்கள், பயன்கள், எப்படி பயன்படுத்துவது என அனைத்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. 

இந்த சொப்பு சாமான்கள் மூலமாக குழந்தைகள் அறிந்து கொள்ளவது பற்றி: 

அரிசியை பற்றி :

அரிசி(நிறம், பச்சை அரிசியா/புழுங்கல் அரிசியா), 

பருப்பு வகைகள்:

துவரம் பருப்பு, பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, போன்ற பருப்பு வகைகள் பற்றியும், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற மற்ற பருப்புகளில் உள்ள வேறுபாடு அறிந்து கொள்ள உதவுகிறது. 

காய்கறிகள்:

தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், என நிலத்தின் மேலே உள்ள காய்கறிகள் பழங்கள் பற்றி குழந்தை அறிந்து கொள்ள உதவுகிறது. 

நிலத்தின் உள்ளே வளரும் கிழங்கு மற்றும் காய்கறி வகைகள்:

கருணை கிழங்கு, செப்பை கிழங்கு, வத்தலை வள்ளி கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் போன்ற கிழங்கு மற்றும் காய்கறி வகைகள் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ள உதவுகிறது. 

மசாலா பொருட்கள்:

காய்ந்த மிளகாய், மிளகு, இலவங்கம், பட்டை, அண்ணாச்சி பூ போன்ற வாசனை மசாலா பொருட்கள் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ள உதவுகிறது. 

தூள் வகை மசாலா பொருட்கள்:

மல்லித்தூள், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், மிளகு தூள், போன்ற தூள் வகைகளை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள். 

கீரைவகைகள்:

சிறுகீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, மூளைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலை கீரை, புளித்தக்கீரை, கொத்தமல்லி கீரை, புதினா, கருவேப்பில்லை போன்ற கீரை வகைகளை பற்றி குழந்தைகள் அறிந்து கொள்கிறார்கள். 

எண்ணெய் வகைகள்:

பசுநெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற பாரம்பரியமான எண்ணெய் மட்டும் குழந்தைகளுக்கு கற்றுத்தரவும். 

சமைக்க பயன்படும் பொருட்கள்:

வாணலி, கரண்டி, தோசைக்கல், தோசைக்கரண்டி, குழிக்கரண்டி, காய்கறி வெட்டும் கத்தி, போன்றவற்றை குழந்தைகள் அறிந்து கொள்ள உதவுகிறது. 

11 Pcs Miniature For Kids | Medium Size

Denim Jeans

₹534.00

குறிப்பு :

சொப்பு சாமான்கள் மூன்று வகையில் உங்கள் Ulamart வலைத்தளத்தில் கிடைக்கிறது. 

1-5 வயது வரை :

24 பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் 

6-15 வயது வரை:

11பொருட்கள் கொண்ட சொப்பு சாமான்கள் 

1-15 வயது வரை:

இட்லி குண்டான் செட்டுடன் தோசை கல்

களிமண் கொண்டு என்னென்ன தயாரிக்கலாம்:

சுத்தமான களிமண் கொண்டு குழந்தைகள், பொம்மைகள், கலைப்பொருட்கள், சின்ன சின்ன களிமண் சிற்பங்கள், பாத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கலாம். இதன் மூலமாக குழந்தைகளின் சிந்தனைகளுக்கு உருவம் கிடைக்கிறது. மேலும் சிந்திப்பதை உருவகப்படுத்தும் ஆற்றல் பெறுகிறார்கள். 

உதாரணமாக:

தங்களுக்கு பிடித்த யானை, சிங்கம், புலி, கரடி, நாய், பூனை, டைனோசர், பூமியை போன்ற மற்ற கோள்கள். குழந்தைகள் உருவாக்கி பழகலாம். இந்த களிமண் சிறப்பு என்னவென்றால் – ஈரம் காயாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

கண்ணாமூச்சி:

கண்களை துணியால் கட்டிக்கொண்டு சுற்றியுள்ளவர்களை பிடிக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலமாக நமது செவி திறன் மற்றும் Mid Brain செயல்பாடு அதிகரிக்கிறது. 

கபடி:

கபடி போட்டிகளில் உலகின் தலைசிறந்த அணி இந்தியாவின் கபடி அணி, தமிழகத்தை பூர்விகமாக கொண்டது கபடி, தமிழ்மொழியின் “கையை-புடி” என்னும் சொல்லு திரிந்து கபடி என்று அழைக்கப்படுகிறது. கபடியின் மறுப்பெயர்  “சடுகுடு”. வீரர்கள் மூச்சு வீடாமல் “கபடி-கபடி” என்று கூறியபடி எதிரணியின் வீரர்களை தொட்டு மீண்டும் எல்லைக்கோட்டை தாண்டி அல்லது தொட வேண்டும். இந்த விளையாட்டில் அணியினர் ஒன்றுபட்டு சிந்திக்க வேண்டும். இந்த விளையாட்டின் மூலமாக  “ஒன்றுபட்டால் வெற்றி”(Team Work-Success) குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடமாகும். 

கோ-கோ:

மைதானத்தில் 9/9 பேர் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு. மகாராஷ்டிரா, மத்தியபிரதேச, தென்னிந்திய மக்களால் விளையாடப்படும் விளையாட்டு. இந்தியாவிற்கு வெளியே தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா வாழ் இந்தியர்கள். என பல்வேறு நாட்டின் மக்களால் விளையாடப்படும் விளையாட்டு. இந்த விளையாட்டின் மூலமாக சமயோஜிதமாக சிந்தித்து குழுவாக செயல்பட்டு வெற்றி பெறுகிறார்கள்.

நீச்சல் பயிற்சி:

உடலின் அனைத்து பகுதிகளிலும் வேலை செய்யும் விளையாட்டு பயிற்சி நீச்சல் பயிற்சியாகும்.  நுரையீரல் பலப்படுத்த உதவுகிறது. முக்கியமான ஒன்று சிறந்த நீச்சல் பயிற்று நிபுணரிடம் நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்ளவும்.

ஓடிப்பிடித்தல்:

ஒரு சிறுவன்/சிறுமி மற்ற சிறுவர்கள்/சிறுமிகளை பிடிக்க வேண்டும், இவ்வாறு ஓடும் போது உடலின் தசைகள் வலுவகிறது. நுரையீரல் பலப்படுகிறது. இந்த விளையாட்டின் மூலமாக சற்று வேகத்துடன் கூடிய கவனமாக மற்றவர்களை பிடிக்க கற்று கொள்கிறார்கள்.