தீட்டப்படாத மற்றும் பட்டை தீட்டப்பட்ட அரிசியின் வேறுபாடுகள்

at-ig

Yogesh Ragupathy

மே 04 2020


        தீட்டப்படாத மற்றும்  பட்டை தீட்டப்பட்ட அரிசியின் வேறுபாடுகள்

அரிசியில் இப்படி ஒரு வேற்றுமை உள்ளது நம்மில் பலர் அறிந்திருக்க முடியாத ஒன்று. பண்டைய மக்கள், சிறுதானியங்கள், கிழங்குகள், பழங்கள், காய்கறிகள், பால், தயிர், இறைச்சி (நெருப்பில் சமைத்த) உணவு வகைகள் உணவாக உண்டு வந்தனர். ஆனால் இன்று அரிசியின் உணவுகளான இட்லி, தோசை, சாதம், போன்ற உணவுகளே முக்கிய உணவாக உள்ளதால்.  இதன் காரணம் அரிசியின் பயன்பாடு அதிகரித்தது தான்.  அரிசியில் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் இருக்க எல்லா வகை நெல்மணிகளையும் ஒரே அரவை இயந்திரத்தில் அரைத்த ஒரே தோற்றம் உள்ள அரிசி போல கிடைக்க செய்கிறார்கள். இதன் காரணமா பல்வேறு அரிசி ரகங்கள் ஒன்று போல தெரிகிறது.

பாரம்பரிய முறையில், முன்பு எல்லாம் உரலில் நெல்லினை உரலில் இட்டு உலக்கையால் குத்தி விட்டு அரிசியை எடுப்பார்கள். இதனால் இதன்பெயர் கை குத்தல் அரிசி என அழைக்கப்படுகிறது. இப்போது Rice Mill எனப்படும் அரவை குடங்களில் அரைப்பதால் Milling எனப்படும் processing ல் அதிகப்படியாக அரைப்பதால் Brown -பழுப்பு நிற அரிசி வெள்ளை நிற அரிசியை கிடக்கிறது.

நாற்று நடவு முதல் அறுவடை வரை அனைத்து முறையில் ஒன்றாக தான் உள்ளது. ஆனால் அரிசி ஆலையின் அரவை இயந்திரத்தில் அரைக்கும் போது செய்யப்படும் மாற்றமே பட்டைதீட்டப்பட்ட அரசியாக மாறிவிடுகிறது. 

பிரவுன் ரைஸ் எனப்படுவது முழுதானியம்(Whole Grain) ஆகும். அதாவது நெல்லில் உள்ள உமி நீங்களா உள்ள  மற்ற அனைத்து முழு தானியம் எனப்படுகிறது. 

அரிசி+தவிடு+வளர் கரு = முழு தானியம் (உமி நீங்களா கிடைப்பது)

வெள்ளை அரிசி: 

அரிசி தவிர மீதம் உள்ள அனைத்தையும் நீக்கிவிடுவது.  (தவிடு+வளர் கரு+உமி நீங்கலாக) 

பிரவுன் ரைஸ் – பழுப்பு அரிசி பெயர்க்காரணம்

இயற்கையான முறையில் உமி நீக்கப்பட்ட அரிசியின் நிறம் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதனை ஆங்கிலதில்  Brown Rice எனப்படுகிறது.

வெள்ளை நிறமாக 

தீட்டப்படாத மற்றும்  பட்டை தீட்டப்பட்ட அரிசியின் ஒற்றுமைகள்:

நாற்று நடவு முதல் அறுவடை வரை பட்டைதீட்டப்படாத மற்றும் பட்டை தீட்டப்பட்ட அரிசிக்கிடையே எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. இதில் ஏற்படும் முக்கிய வேறுபாடு என்பது இயந்திரத்தில் அறைக்கப்படும் Milling Process போது  அரிசியின் தரமே மாறிவிடுகிறது. 

1

Low Glycemic Index

High Glycemic Index 

2

Kcal – 218

Kcal 242

3

46 carbs

53 carbs 

4

High Fibre contains

Low Fibre level

5

Blood cholestrol reduces

Increase Blood cholestrol 

6

Whole grain rice

Only carbohydrates

பட்டை தீட்டப்பட்ட அரிசியின் பயன்கள் 

பட்டை தீட்டப்பட்ட அரிசியை உணவாக தினசரி உட்கொள்ள ஏற்படும் பயன்கள் 

1. அளவு தெரியாமல் உண்ணலாம்.

2. தொப்பை அதிகரிக்க உதவுகிறது. 

3. சுறுசுறுப்பு எங்கே என, உங்களை தேடிப்பார்க்க வைக்கிறது. 

4. சர்க்கரை குறைபாடு(நோய்) உங்களிடம் எளிதில் வந்து சேர உதவுகிறது. இலவசமாக ரத்தக்கொதிப்பு கிடைக்க உதவுகிறது. 

5. மருத்துவ துறை வளர்ச்சிக்கு நாம் முக்கிய காரணமாக உதவுகிறது. 

   5a. மருத்துவர்களின் Consulting Fees (மாதம், வருடம், ஆண்டுகள், -உயிரோடு உள்ளவரை) நம்மால் முடிந்த வரை கொடுக்கலாம். 

   5b. மருந்து நிறுவனங்கள் வளர்ச்சிக்கு நமது உயிர் உள்ளவரை வாழவைக்க முடிகிறது.(பல மருந்துகள் வெளி நாடுகளில் தடைசெய்ய பட்டவை!)

     5c. இதுவரை படித்தது போதாது என்று 5c படிக்கவந்த உங்களை ….. எப்படி பாராட்டுவது என்றெ தெரியவில்லை.     

பட்டை தீட்டப்பட்ட அரிசியை எப்படி சமைப்பது?

சமைப்பதற்கு மிகவும் எளிமையானது, 20-30 நிமிடங்கள் அரிசியை உறவைத்தலே போதுமானது. மேலும், குக்கரில் சமைப்பதற்கு  10-15 நிமிடங்கள் வரை போதுமானது. அரிசி கஞ்சி வடிக்கும் முறையில் 20-25 நிமிடம் வரை தேவைப்படும். 

துணுக்குகள்: பிரஷர் குக்கரில் சமைக்கும் உணவில் அதிகப்படியான Starch சத்து உள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

பாரம்பரிய முறையானா கஞ்சி வடிக்கும் முறையில் அதிகப்படியாக உள்ள Starch வடிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

பட்டை தீட்டப்பட்ட அரிசி இரவில் உண்ணலாமா?

இரவில் அரிசி உணவினை உண்ணலாமா? 

இரவு 7 மணிக்கு முன் உணவினை உட்க்கொள்ள வேண்டும்(இன்றும் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ள ஒன்று தான்). மேலும், இரவு உணவுக்கிற்கு பின் சிறிய நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும். 9 முதல் 9.30 மணிக்குள் படுப்பதற்கு சென்று விடவேண்டும். (தொலைக்காட்சியின் நெடுதொடர்கள் நீங்கள் பார்க்காமல் விடுவதால், மணஅழுத்தம்குறைகிறது. இரவில் நல்ல உறக்க கிடைக்கிறது)

இதனால் அடுத்தநாள் நீங்கள் உற்சாகமான இருக்க உதவுகிறது.

பட்டை தீட்டப்பட்ட அரிசியால் உடல் எடை கூடுமா?

பட்டை தீட்டப்பட்ட அரிசியில் அதிகப்படியாக இருப்பது Carbohydrate-மாவுசத்து, இதனால் உணவு உடலின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

பட்டை தீட்டப்படாத அரிசியின் பயன்கள் 

பட்டைதீட்டப்படாத அரிசியை முழுஅரிசி என்று சொல்லவேண்டும். முழுஅரிசி என்பது உமி நீங்களா கிடைக்கும் அரிசியாகும். இதனால் இதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. இந்த வகை அரிசியை ஆங்கிலதில் “Brown Rice” எனவும் அழைக்கப்படுகிறது. 

இதில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:

1. நார்சத்து உள்ளதால் உணவு செரிமான ஆகா உதவுகிறது. மேலும் தேவையற்ற கொழுப்பு உடலில் சேராமல் உதவுகிறது. 

2.Low Glycemic Index 45-50 அளவில் உள்ளது. இதனால் உடற்பருமன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

3. 100 கிராம் பட்டை தீட்டப்படாத அரிசியில் 46கிராம் மாவு சத்து கிடைக்கிறது. இது Polished Rice காட்டிலும் குறைவானது. 

4. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. சாதாரண polished Rice யில் ரத்தத்தின் கொழுப்பு அதிகரிக்கும். 

5. பட்டைதீட்டப்படாத அரிசி (Unpolished rice) முழு அரிசியாகும். 

பட்டை தீட்டப்படாத அரிசியை எப்படி சமைப்பது?

பட்டைதீட்டப்படாத அரிசி சமைக்க 30-45 நிமிடங்கள் Low Flame வைக்க வேண்டும். அரிசி முழுமையாக வேகவைக்க தேவையான நேரமாகும். 

பட்டை தீட்டப்படாத அரிசி எவ்வளவு நேரம் உறவைப்பது?

1 கப் அளவு அரிசிக்கு 2 கப் மிதமான வெந்நீரில் 2மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அல்லது 1 கப் அளவு அரிசிக்கு 2 கப் நீரில் இரவு முழுவது ஊறவைக்க வேண்டும். 

கஞ்சி வடித்த சாதம் உணவுக்கு ஏற்றது. இந்த கஞ்சியில் சிறிதளவு உப்பு கலந்து நீராகாரம் காலை நேரத்தில் தேநீர் அல்லது காபி மாற்றாக குடிக்கலாம். 

பட்டை தீட்டப்படாத அரிசி இரவில் உண்ணலாமா?

இரவில் அரிசியை இட்லி, தோசை அல்லது கஞ்சி+பழங்கள் உடன் உட்கொள்ளலாம். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேருவதை குறைக்கலாம். 

பட்டை தீட்டப்படாதஅரிசியால் உடல் எடை கூடுமா?

சாதாரண அரிசியோடு ஒப்பிடும் போது எடை கூடாது, இதன் காரணம் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் குறைந்த உணவு உண்டவுடன் வயிறு நிறைந்த தன்மை உணரலாம். 

இதில் எது நல்ல சத்தானது?

இதில் சத்தானது Unpolished Rice அதாவது பட்டை தீட்டப்படாத அரிசி மட்டுமே. 

1. உணவில் உள்ள சத்துக்கள்

2. குறைந்த அளவு உணவில், வயிறு நிறைவது. 

3. Low Glycemic Index Rice – என்பது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் சேராமல் தடுக்க உதவுகிறது. 

4. நார்சத்து உள்ளதால் எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. 

Nutrinational Value Comparison 

பட்டை தீட்டப்படாத அரிசி வகைகள் யாவை?

பழுப்பு நிறத்தில் உள்ள அரிசி, 

1.   Brown Rice, 

2. கவுணி அரிசிவகைகள், 

3. சம்பா அரிசி வகைகள். 

4. கைக்குத்தல் அரிசி வகைகள் 

5. Semipolished அரிசி வகைகள் 

இதில் பூச்சிகொல்லி பயன்படுத்தாத (ஆர்கானிக்) அரிசி எப்படி தேர்ந்தெடுப்பது?

Organic Farming என்பது இயற்கை முறையில் பயிரிடப்பட்ட வேளாண் விளைபொருட்கள் Organic Products எனப்படுகிறது. 

உங்கள் ஊரில் உள்ள ஆர்கானிக் முறையில் பயிரிடும் விவசாயிடம் நேரடியாக வாங்கி கொள்ளலாம். அல்லது Ulamart.com வலைத்தளத்தின் மூலமாக பொருட்களை தேர்தெடுத்து வாங்கி கொள்ளலாம். 

ஆன்லைன்  எப்படி வாங்குவது?

https://www.ulamart.com/ta/rice/

மேலே கொடுக்க பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான அரிசியை தேர்தெடுத்து online வாங்கிக்கொள்ளலாம். 

நீங்கள் தேர்ந்துஎடுக்க 

மாப்பிள்ளைச்சம்பா அரிசி, சிவப்புகவுணி அரிசி, சீரகச்சம்பா அரிசி, கருப்புகவுணி அரிசி, கிச்சிலி சம்பா அரிசி, பூங்கார் அரிசி, குள்ளக்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, கருடன் சம்பா அரிசி, குடவாழை அரிசி, ராஜமுடி அரிசி, நவரா அரிசி, மூங்கில் அரிசி, தூயமல்லி, பொன்னி போன்ற அரசி வகைகள் உள்ளது. 

மேலே உள்ள அரிசி ஒவ்வொன்றும் தனித்தனி மருத்துவ குணங்கள் உள்ள அரிசி வகைகள் ஆகும். 

ஒருசில அரிசி வகைகளின் சிறப்பு அறிய இங்கே கிளிக் செய்யவும்.