கேழ்வரகு
கோதுமை மற்றும் அரிசிக்கு மாற்றான உணவுகளில் சிறுதானியங்கள். அதில் ஒன்று தான் கேழ்வரகு. கேழ்வரகின் பயன்பாடு இந்தியாவில், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திர, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் மகாராஷ்டிரா, இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரகாண்ட மாநிலங்கள் அதிக அளவில் கேழ்வரகு உற்பத்தி செய்யும் மாநிலகங்கள் ஆகும்.
ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா சார்த்த பயிர் வகையாகும். ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்ட பயிர்வகையாகும்.
பயிரிட தேவையான காலம்:
3-5 மாதங்கள்
பயிரிட தேவையான காலம்
3-5 மாதங்கள்
கேழ்வரகு மருத்துவ குணங்களை:
- கேழ்வரகில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகள் வலுப்படும் உதவுகிறது.
- கேழ்வரகு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- கேழ்வரகில் உள்ள Lecithin மற்றும் Methionine போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
- கேழ்வரகில் உள்ள இரும்பு சத்து ரத்தசோகை குறைபாட்டை குணப்படுத்து உதவுகிறது.
- உடலில் உள்ள உஷ்ணத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.
- High BP, Lever Disorder, இதய குறைபாடு உள்ளவர்கள் (Heart Dieseases), ஆஸ்துமா(Asthma) போன்ற நோய்கள் குணப்படுத்த உதவும். தாய்மார்களுக்கு பால் சுரக்கா உதவும்.
- கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள்(Phytochemical Compounds) செரிமானத்தை குறைக்கின்றன.
- இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
- ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு, ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும், இது அற்புதமான மருந்தாகும். கேழ்வரகு, செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் சாப்பிட்டு வந்தால், பால் சுரபை அதிகரிக்க உதவும்.
- கேழ்வரகில் இயற்கையாகவே இரும்பு மற்றும் சுண்ணாப்பு சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்க செய்கிறது.
சமையல் குறிப்பு:
- இட்லி
- தோசை
- கஞ்சி
- களி
- அடை
- கூழ்.
சாமை
சிறுதானியங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். கி.மு 2600 முன்பு, சிந்து சமவெளி நாகரிகத்தின் Harappa மற்றும் Famaana வில் சாமை பயிரடப்பட்டுள்ளது என்று வரலாற்று அய்வு கூறுகிறது.
இது புஞ்சை வகை சார்ந்தது. சிறுதானியங்கள் சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. இதன் சிறப்பு, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
காய்ச்சல் போது, ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு உபாதை தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் இனப்பெருக்கக்காண அணு உற்பத்திக்கும் மற்றும் ஆண்மைக் குறைவை நீக்கும்.
பயிரிட தேவையான காலம்:
75-80 நாட்கள்
சாமை மருத்துவ குணங்களை:
- சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர நார்சத்து அவசியம். நெல்யைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.
- சாமையை , தினசரி உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
- சாமையில் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதி மற்றும் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
- நார்சத்து, உள்ள காரணத்தினால், மலச்சிக்கலை போக்க வல்லது. மேலும், நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு முக்கியத்துவம் வாய்த்தது
சமையல் குறிப்பு:
- உப்புமா
- பொங்கல்
- சாதவகைகள்
- தோசை
- கொழுக்கட்டை
- பாயசம்
- களி
- அடை
- கூழ்.
தினை
தமிழ் இலக்கியங்களில் அறியப்படும் செய்தி, குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேன் மற்றும் “தினை” மாவு இருந்ததாக பதிவு செய்ய பட்டுள்ளது. இதிலிருந்தே நமது முன்னோர்கள் தினையின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தனர் என்று நாம் இன்று அறிய முடிகிறது. தினை நார்ச்சத்து நிறைந்த உணவாகும். இதை தினசரி ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தவும் அவற்றில் இருக்கும் ஆறாத புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம்மாகும்.
பயிரிட தேவையான காலம்:
65-75 நாட்கள்
மருத்துவ குணங்களை:
தினை மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகரிக்க செய்கிறது. தினை வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நமது உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின் சத்துகள் தேவையென்றாலும், வைட்டமின் பி 1 சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும் ஏனெனில் இந்த வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்ய உதவும். இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் வராமல் தடுக்கிறது.
காய்சசல், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவற்றை கொடுப்பது சிறந்த உணவாக இருக்கும். மனிதனுக்கும் அவன் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நன்கு வலுவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தினை கால்சியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்ட தானியமாகும். தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகும்.
நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினை உணவுகளை சாப்பிடுவர நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். தினை புரதம் சத்துக்கள் அதிகம் கொண்டது அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாத வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். தினையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.
சமையல் குறிப்பு:
- உப்புமா
- பொங்கல்
- சாதவகைகள்
- தோசை
- கொழுக்கட்டை
- பாயசம்
- களி
- அடை
- கூழ்.
குதிரைவாலி
குதிரைவாலி, புற்கள் வகையைச் சார்ந்த தாவரம் வகை ஆகும். குதிரைவாலி புன்செய் பயிர் வகை ஆகும். மானாவாரிப் பயிர் வகை ஆகும். குதிரைவாலியை உலகில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பயிரடப்படுகிறது. நம் மூதாதையர் காலத்திலிருந்து உணவாகப்பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனா மற்றும் ஜப்பான்ல் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பயிரப்பட்டுள்ளது. நெல் விளையாத நிலங்களில் குதிரைவாலி பயிரிடப்படுகிறது. இதன் அரிசியை வேகவைத்தும் கஞ்சியாவும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிடும் பழக்கம் பண்டைய தமிழர்களிடம் உள்ளது. தமிழர்களின் உணவில் குதிரைவாலி முக்கிய பங்கு வகிக்கிறது.
பயிரிட தேவையான காலம்: 80-90 நாட்கள்
சாமை மருத்துவ குணங்களை:
- உடலை சீராக வைக்க உதவுகிறது.
- சர்க்கரை அளவினை குறைக்க வல்லது.
- ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.
- இத்தானியத்தில் நார்ச்சத்து உள்ளதால் செரிமாணத்திற்கு உதவும், மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஊட்டம் அளிக்கிறது,
- சுண்ணாம்புச்சத்து உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான வலிமை அளிக்கின்றது,
- பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, ரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும், தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
சமையல் குறிப்பு:
- உப்புமா
- பொங்கல்
- சாதவகைகள்
- தோசை
- கொழுக்கட்டை
- களி
- அடை
- கூழ்.
கம்பு
கம்பு, புன்செய் நிலப்பயிர் சிறுதானிய வகை ஆகும். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது. கம்பின் பூர்விகம் ஆப்பிரிக்கா வகை இருக்கலாம் என ஆராச்சியாளர்கள் தெரிவிகிக்கிறார்கள். கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கிக்கொண்டு வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
இன்றளவில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சீனா, தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மக்களுக்கும் மற்றும்
கால்நடைக்கும் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.
தானியங்களிலேயே அதிக அளவில் புரதம், கம்பில் தான் 11.8 சதவிகிதம் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
பயிரிட தேவையான காலம்: 90-120 நாட்கள்
கம்பு மருத்துவ குணங்களை:
100 கிராம் கம்பில் உள்ள மருத்துவ குணங்களை
- 42 கிராம் – கால்சியம் சத்து(Calcium) உள்ளது.
- 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து(Iron) உள்ளது.
- B வைட்டமின் சத்து(VitaminB) 0.38 மில்லி கிராம் உள்ளது.
- ரைபோபிளேவின்(Riboflavin) 0.21 மில்லி கிராம் உள்ளது.
- நயாசின் சத்து(Niacin) 2.8 மில்லி கிராம் உள்ளது.
- Oil Content வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் Polyunsaturated Fatty Acid உள்ளது. இது உடலுக்கு தேவையான கொழுப்பு ஆகும்.
- உடல் சூட்டை தணிக்கும் உதவும் மற்றும் குடல் புண்ணை குறைகிறது.
- உடலுக்கு தேவையான புரதச்சத்து இதில் உள்ளது.
- நார்சத்து உள்ளதால், எளிதில் செரிமான ஆகும்
- நார்சத்து உள்ளதால், எளிதில் செரிமான ஆகும்
- வயிற்றுப்புண்(Ulcer) குணமாக்க உதவும்.
- மலசிக்கல் உபாதை உள்ளவர்கள் உகந்த உணவாகும்
சமையல் குறிப்பு:
- கம்பு சப்பாத்தி
- கம்பு கஞ்சி
- கம்பகளி
- கம்பு தோசை
- கம்பு இட்லி
- கம்பு பிஸ்கட்