சர்க்கரை (நோயை) குறைபாட்டை கட்டுக்குள் வைக்கும் ஏழு முக்கிய உணவுகள்.

at-ig

Yogesh Ragupathy

மார்ச் 15 2022


        சர்க்கரை (நோயை) குறைபாட்டை கட்டுக்குள் வைக்கும் ஏழு முக்கிய உணவுகள்.

சர்க்கரை நோய் என்பது யாதெனில் “உங்கள் இரத்ததில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவு இயல்பை விட அதிகமாக இருத்தல் ஆகும்”. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிக்க காரணமாக இருப்பது “மைதா மாவில் தயாரிக்கப்படுகிற  ரொட்டிகள், பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி வகைகள், Pizza, Burger, Pasta மற்றும் வெள்ளை சர்க்கரையில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள்” இது போன்ற உணவு வகைகள் ரத்தத்தில் சர்க்கரை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம், “என்று இந்திய நீரிழிவு ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வில் அறியப்படுகிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவை உணவு உண்ட பின் ரத்தத்தில் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

உங்கள் தினசரி உணவுத் திட்டம் “நாள் முழுவதும் உங்கள் தட்டில் வைக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவு மற்றும் வகைகளில் கவனம் செலுத்துமாறு இருக்க வேண்டும்.

நீங்கள் விரும்பு உணவுகளை அளவாகவும் போதுமானதாவும் சாப்பிட வேண்டும்.    தேவையற்ற மோசமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இந்திய நீரிழிவு ஆராய்ச்சி நிபுணர்கள் கூறும் ஏழு உணவுகள் இங்கே உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, உங்களின் இந்த உணவு பழக்கம், உங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ துவக்க உதவும்.

1. பச்சை, சமைத்த அல்லது வறுத்த காய்கறிகள்: 

இவை உணவுக்கு நிறம், சுவை மற்றும் சுவை-அமைப்பு சேர்க்கின்றன. காளான்கள், வெந்தய கீரை, நாவல் பழம், வெங்காயம், கத்திரிக்காய், தக்காளி, கீரைகள், கோஸ், எலுமிச்சை மற்றும் சுரைக்காய் போன்ற குறைந்த கார்ப் உள்ள உணவுகளை போன்ற சுவையான, குறைந்த கார்ப் காய்கறிகளைத் தேர்வு செய்யவும்.

2. கீரைவகைகள் 

நீங்கள் தினசரி உட்கொளுக்கும் உணவு பட்டியலில் காய்கறி சாலட் அவசியம் இருக்க வேண்டும். உதாரணமாக Vegetable Salad – பழங்கள், காய், கனிகள், கீரைவகைகள் போன்ற சத்துக்கள் மிக்க Carbs எனப்படும் மாவு சத்துக்கள் குறைவான உணவு வகைகள் உட்கொள்ள ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 

3.சுவையான, குறைந்த கலோரி பானங்கள்: 

நாம் தினசரி பருகும் குடிநீரில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலை, துளசி இலை, போன்ற நீரில் கலந்து அருந்தலாம். இவை காபி, தேநீர்  மாற்றாக பயன்படுத்தலாம். ஒரு சிலர் cold காபி/ஐஸ் டீயை அருந்துவார்கள். 

4.Melon, berries பழவகை: 

இந்த வகை பழங்கள், 1 கப் அளவில் வெறும் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய ஆரோக்கியமான விருந்தாகும், மேலும் இது கொஞ்சம் இனிப்பானது” என்று பவர்ஸ் கூறுகிறார்.

உணவு வகைகளில் புது முயற்சியாக, melon/berries யை ஐஸ் கட்டி/தயிருடன் கலந்து அருந்தலாம். 

5. நார்சத்து, முழுதானிய பயிர்கள்: 

பாரம்பரிய சிவப்பு அரிசி வகைகள், சிறுதானியங்கள், முழுபயிர்வகைகள் போன்ற நார்சத்து மிக்க உணவு வகைகளை  தினசரி தேர்வு செய்வதால் தேவையற்ற மற்ற Junk foods தவிர்க்கலாம். இதனால் ரத்தத்தின் சர்க்கரை அளவானது குறைய துவங்குகிறது. 

6. அத்தியாவசியமான கொழுப்பு சத்து: 

நல்ல கொழுப்புசத்து (HDL-high-density lipoprotein) உள்ள தேர்வுகளில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நாட்டு பசு வெண்ணெய் மற்றும் நாட்டு பசுநெய், கொழுப்பு சத்து உள்ள மீன்கள், அவகேடோ  முதலியவை அடங்கும் – உதாரணமாக, வேகவைத்த மீன் உணவுவகைகள், (பொறித்த உணவு வகைகளை அளவுகளை குறைத்து கொள்ளலாம்)

போனஸ்: உணவு உண்டபின் கைகளை கழுவும் போது கைகளில் எண்ணெய் பசை போன்ற கொழகொழப்பு தன்மையான உணவுகளை தவிர்க்கலாம் என உணவில் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

7. புரதசத்து 

தயிர், முட்டை(நாட்டு கோழி முட்டை, காடை முட்டை, வாத்து மொட்டை), கொழுப்புகள் அற்ற இறைச்சி(Lean Meat-மீன், ஆட்டு இறைச்சி, காடை இறைச்சி, முயல் இறைச்சி), போன்ற புரதம் மிக்க உணவுகளை உண்ணும் பொது உணவு கட்டுப்பாட்டை மறவாதீர். 

போனஸ்: உங்களின் எடை எவ்வளவும் உள்ளதோ அதே அல்லவோ கிராம் களில் புரதம் உடலுக்கு தேவை என உணவில் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உதாரணமாக: உங்களின் எடை 65 கிலோ-வேனில் நீங்கள் ஒரு நாள் தேவைக்கு 65கிராம் புரதம் உங்களின் உணவில் அவசியம் இருக்க வேண்டும். 

வெளிமாநிலங்களில்/வெளிநாடுகளில்  வசிக்கும் இந்தியர்கள் தங்களின் காலை சிற்றுண்டிக்கு தேவைக்கு சிறுதானியங்களில் தயாரிக்க பட்ட இட்லி, தோசை, இடியப்பம், அடை, சப்பாத்தி(ரொட்டி) போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும்,  சிற்றுண்டியாக பழங்கள், கோதுமை சப்பாத்தி, சிறுதானிய கஞ்சி, களி போன்றவற்றை பயன்படுத்தலாம். இது நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் மட்டுமின்றி புதுத்துணர்ச்சி அளிக்கிறது.  

போனஸ்: சோடியம் குறைவையான இறைச்சி உணவுகளை பயன்படுத்துவதால் இரத்தத்தில் சர்க்கரை போன்ற மற்ற நோய்களில் இருந்து விடு பட உதவுகிறது. 

ஒட்டுமொத்தமாக, உங்கள் உணவுத் திட்டம் உங்களை ஒருபோது சலிப்படை செய்யுமாறு இருக்க கூடாது.  என்று இந்திய நீரிழிவு ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகிறார்கள். “இது கார்போஹைட்ரேட்டுகளின் சமநிலையுடன் நீங்கள் விரும்பும் உணவுகளை அவசியம் உள்ளடக்கியிருக்க வேண்டும்.”